அக்கிரமம் ,அநியாயம் ,அதிகார துஷ்பிரயோகம் ,உரிமை மறுப்பு…இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான துண்டுக்காகிதம் கூட இல்லை.வாக்களிக்க முடியாது.
என்னடா இது? ‘எல்லோர்க்கும் சுதந்திரம் என்பது உறுதியாச்சு ” என பாடியதெல்லாம் பொய்யா,புனை சுருட்டா?
ஆங்கிலேயன்தான் அடிமைப்படுத்தி ஆண்டான். அவன் கப்பலேறிப் போனபிறகு நான் மனிதன் என்பதற்கான தன்மை இழந்து அடிமை நாயாக வாழவேண்டுமா?
“குற்றவாளியாகவே வாழ்ந்தவன் “என்கிற அடையாளத்தை கோர்ட்டு வழியாக என் முகத்தில் குத்திவிட்டார்களே?
இப்படியெல்லாம் இந்த ஜெய் பீம் படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த பின்னர் பொங்கி எழுந்த வினாக்கள்.!