விமர்சனம் என்பது ஒவ்வொருவர் மனத்தினைப் பொருத்து அமைவதாகும்.அவை பெரும்பாலான மக்களது கருத்துடன் ஒத்துப்போவதில்லை. மக்களின் கருத்துகளை பிரதிபலிப்பதாகவும் இருப்பதில்லை.. அத்தி பூத்தது மாதிரி சில ஒத்துப்போவதுண்டு.
விமர்சகர்கள் வித்தியாசமானவர்கள்.!
டாப்ஸி. இந்திய திரை வானில் முக்கியமான ஒருவர்.
“இவர் ஒரே மாதிரியான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார் .இதையே தொடர்ந்தால் அவரது தொழில் பாதிப்படையலாம் “என்பதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
“நான் இப்போது எத்தகைய கேரக்டர்களில் கவனத்தை செலுத்தி நடிக்கிறேனோ அதில் எனக்கு உடன்பாடு உண்டு.
சாந்தமான,வலிமையில்லாத கேரக்டர்களை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடுமையான வலிகளை சொல்கிற கேரக்டர்களை செய்வதில் முழு உடன்பாடு இருக்கிறது.
சில விமர்சனங்களுக்காக நான் மாறப்போவதில்லை.அதைப்பற்றிய கவலையும் இல்லை”