சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா, தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறினார். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் ,தற்போது விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் தீவிர ஆன்மீக சுற்றுலா சென்று வருகின்றனர்.
சமீபத்தில் திருப்பதி சென்று வந்த இந்த ஜோடி. இப்போது வட இந்திய கோயில்களுக்கு விசிட் அடித்துள்ளனர் . இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஸ்ரீரடி, மும்பை தேவி, மகா லட்சுமி கோவில், சித்தி விநாயகர் ஆகிய கோயில்களுக்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஆன்மீக விசிட் அடிப்பதால் விரைவில் இந்த ஜோடி திருமண ஜோடியாக மாறப்போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இந்நிலையில் நயன்தாராவின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பதால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளும் முன்பு மரம் ஒன்றை திருமணம் செய்து தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதால் நடிகை நயன்தாரா இந்த பரிகாரத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்னர் நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக காசி, அயோத்தி மற்றும் பெங்களூரில் 3 மரங்களை திருமணம் செய்து பரிகாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.