டெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று காலை 11 மணிக்கு 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடந்தது..
இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப்பெற்றனர்
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார் .
சிறந்த படத்துக்கான தேசிய விருதைக் கேரள நடிகர் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின்டே சிங்கம்’ படம் பெறுகிறது.
நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்..
ஏற்கனவே 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆடுகளம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நிலையில், ‘அசுரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதையும் வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் பெற்றது
இதற்கான விருதை படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். .தாணுவிற்கு இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். .
“துணை ஜனாதிபதி கரங்களில் நம் தேசத்தின் உயரிய விருதை வாங்குவதில் மிகவும் பெருமைகொள்கிறேன். இந்த பெருமைக்கு காரணமான இயக்குனர் மற்றும் அசுரன் திரைப்பட குழுவிற்கு என் ஆத்மார்த்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் “என்று தாணு தன்னுடைய நன்றியை பகிர்ந்து கொண்டார்.
‘போன்ஸ்லே’ இந்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மனோஜ் பாஜ்பாயிக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘மணிகர்ணிகா’, ‘பங்கா’ படங்களில் நடித்ததற்காக கங்கனா ரணாவத் பெற்றுக்கொண்டார்.’
சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே…’ பாடலுக்காக இசையமைப்பாளர் இமான் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுக்கொண்டார்.
சிறந்த ஜுரி தேசிய விருது ‘ஒத்த செருப்பு’ படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது..
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது ‘கே.டி’ படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதுகளை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார்
இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை.பால்கெ விருதை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினிகாந்துக்கு வழங்கினார்.இந்த .
விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் விருது விழாவில் ரஜினி காந்த் மற்றும் தனுஷ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.விருது குறித்து ரஜினி பேசுகையில் இவ்விருதை மறைந்த இயக்குனர் கே.பாலசந்தருக்கு சமர்ப்பிப்பதாக வும் தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.