திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடிகை அமலாபால் தொடங்கி இருக்கிறார் . இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில், தயாராகும் அந்த படத்தின் பெயர் ‘கடாவர்.’இந்த படத்தில் அமலாபாலுக்கு முக்கியமான கேரக்டர் என்கிறார்கள்.
இந்த படத்தில் ஃ போரன்சிக் சர்ஜனாக அமலா பால் நடிக்கிறார். இந்தியாவில் முதல் முறையாக, ஒரு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் (ஃபோரன்ஸிக் சர்ஜன்) விசாரணை அதிகாரியாக அழைத்து வரப்படும் கதையினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. வித்தியாசமான இவ்வேடத்திற்காக, நடிகை அமலா பால் ஒரு வார காலம் மருத்துவமனை சென்று, அந்த துறை சார்ந்த, தேர்ந்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்றார். தன்னை முழுதுமாக தயார் செய்துகொண்டு, இப்பாத்திரத்தில் ஒரு அசலான ஃபோரன்ஸிக் சர்ஜனாக கலக்கியுள்ளார் என்கிறார்கள். மேலும் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ஆதித் அருண், முனிஷ்காந்த் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஞ்சின் ராஜ் இசையமைப்பாளராகவும், அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராகவும், ஷான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், அபிலாஷ் பிள்ளை வசனகர்த்தாவாகவும், ராகுல் கலை இயக்குநராகவும், தினேஷ் கண்ணன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர் .