தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதென்ன வரலாறு ?அதையும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்ல !!
மிக சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை சன்னி லியோன் இணைந்ததில், படக்குழு மிகப்பெரும் உற்சாகத்தில் இருந்தது. இந்நிலையில் மிகக்குறுகிய காலத்தில் படக்குழுவினரின் அயராத உழைப்பில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு மும்பையில் இனிதே நிறைவு பெற்றுள்ளது. கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு நடத்தப்பட்ட இப்படப்பிடிப்பில், நடிகை சன்னி லியோன் நடித்த முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
இயக்குநர் யுவன் கூறியதாவது..
“ஓ எம் ஜி என்பது “ஓ மை கோஸ்ட்” என்பதன் சுருக்கமே, இப்படம் முழுக்க, முழுக்க ஒரு கமர்ஷியல், பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். இப்படம் வரலாற்று பின்னணி கதைக் களத்தை கொண்டது. முதல் முறையாக வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடியை செய்துள்ளோம். சன்னி லியோன் பாத்திரம் படத்தின் மிக முக்கியமான முதன்மை பாத்திரமாக, ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும்” என்றார்.
நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக்.டி .மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.