மார்க்கண்டேயர் சிவகுமாரின் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர் இயக்குநர் பாலா.
விக்ரம்-சூர்யா இருவரையும் வைத்து அவர்களது ரசிகர்களின் மனம் கசந்துவிடாமல் ‘பிதா மகன்’ என்கிற படத்தை தந்தவர்.இதற்கு முன்னர் விக்ரமுக்கு ‘சேது’படம் ,சூர்யாவுக்கு ‘நந்தா ‘படம் என அந்த இருவருக்குமே சிறந்த படங்களை தந்திருக்கிறார் பாலா.
சிவகுமாரின் பிறந்த நாளன்று சூர்யாவின் இருவரும் இணையும் படம் பற்றிய அறிவிப்பினை சூர்யாவே அறிவித்திருக்கிறார்.
தனது டிவிட்டர் பதிவில் மகிழ்ச்சி வழிய அந்த அறிவிப்பு இருந்தது.
“என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…”என கூறப்பட்டிருந்தது.