கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணம் அடைந்து விட்டார்.இதனால் தமிழகத்தில் இருக்கிற ரஜினியின் ரசிகர்கள் படபடப்பு அடைந்திருக்கிறார்கள்.
புனித்தும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள்.
இதுமட்டுமல்ல ,ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் புனித்தும் கர்நாடக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.அவரது மரணம் திடீரென இன்று ஏற்பட்டு விட்டது.
ரஜினியின் மனைவி லதா “வழக்கமான செக் அப் தான் ” என்று சொன்னாலும் மருத்துவமனையின் மருத்துவக் குறிப்பு வெளியாகி ரசிகர்களை வேதனை அடைய வைத்து விட்டது.
, “தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோடிட் அர்ட்டரி ரீவேஸ்குலரைசேஷன் என்னும் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார்,” நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது.
சில நாட்களில் அவர் வீடு திரும்பலாம் என்று அவர் சொல்லியிருப்பதால் சற்று நிம்மதியுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.