மறைந்த கன்னடநடிகர் ராஜ்குமாரின் மகன் நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
இன்று காலை நடிகர் புனித் ராஜ்குமார் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொண்டி ருந்த போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்து மயங்கி விழுந்தார்.இதையடுத்து உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்,அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு லேசான மாரைடப்பு ஏற்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்
..இன்று காலை, 7.33 மணிக்கு, தனது சகோதரரும், கன்னட நடிகருமான ஷிவா ராஜ்குமார் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி 2 படம் குறித்து,’பஜ்ரங்கி 2 படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வாழ்த்துகளை வெளியிட்டு ஒரு சில மணி நேரத்தில் புனித ராஜ்குமாரின் மரணச்செய்தி வெளியாகியுள்ளது கன்னட திரையுலகினரையும்,அவரது ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கண்ணீர் மல்க ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர், இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை அரசு மரியாதையுடன் அவரது உடல் நலடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்