கார்டெலியா ஆடம்பர நட்சத்திர கப்பலை சோதனையிட்ட போதை பொருள் தடுப்பு காவல் படையினர் ஆர்யன் கானை கைது செய்து காவலில் வைத்திருந்தனர்.
கோவா செல்லவேண்டிய அந்த சொகுசு கப்பல் மும்பை கடலில் நங்கூரமிட்டிருந்தது. பார்ட்டி என்றால் மது மங்கை இல்லாமலா ? இவைகளுடன் உயர்தர போதைப்பொருள்களும் புலங்கி அந்த கப்பலில் இருக்கின்றன.
தகவல் அறிந்த காவல் படையினர் திடீரென சுற்றி வளைத்து கப்பலை சோதனை செய்ததில் ஆர்யன் கான் உள்பட 20 பேரை கைது செய்தார்கள். 2 நைஜீரியர்களும் அடக்கம்.
ஆர்யன்கான் பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மகன் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
காவலில் வைக்கப்பட்ட ஆர்யன்கானை ஜாமினில் எடுக்க அரசியல் பிரபலங்கள் ,திரையுலக ஜாம்பவான்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள்
ஆனாலும் 20 நாட்கள் அவரை காவலில் வைத்து விட்டது காவல் துறை.
அதிக அளவிலான லாயர்கள் கடுமையுடன் போராடி லாயலுடன் மீட்டு விட்டார்கள்.
மகன் வெளிவந்த மகிழ்ச்சி ஷாருக் கானுக்கு.!
மிகப்பெரிய விருந்து கொடுத்து லாயர்களை கவுரவித்துவிட்டார்.
ஜாமீன் மனுவில் கையெழுத்துப் போட்டவர்களில் நடிகை ஜூஹி சாவ்லாவும் ஒரு முக்கியப்புள்ளி.! சூப்பரப்பு !!