இசைப்புயல்,ஏ.ஆர்.ரஹ்மான்,சமீபத்தில் தனது டுவிட்டரில்,பதிவிட்டுள்ள தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த சூர்யா என்ற பெண், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான புகழ்பெற்ற 391 பாடல்களின் வரிகளை கொண்டு,71 மீட்டர் நீளம், 56 மீட்டர் அகலத்தில்,வித்தியாசமான முறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை உருவாக்கி உள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பிரபலமான 391 பாடல்களின் வரிகளை கொண்டு, அவரின் ஓவியத்தை அந்த பெண் வரைந்துள்ளார்.
ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடல் முதல் பாம்பே படத்தில் வரும் பாடல்கள் வரை இதில் அவர் பயன்படுத்தி உள்ளார்.இது குறித்த தகவலை புகைப்படதுடன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.