‘அண்ணாத்த’ திரைப்படம்
இயக்கம் ; சிறுத்தைசிவா.
நடிகர்கள் :
ரஜினிகாந்த்,கீர்த்திசுரேஷ்,ரஜினிகாந்த் சூரி.மீனா குஷ்பூ உள்ளிட்ட பலர்…
இசை : டி இமான்,ஒளிப்பதிவு: வெற்றிபழனிச்சாமி,எடிட்டிங் : ரூபன்.
ரேட்டிங் :2.5/5
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை உள்ளிட்ட சுத்துப்பட்டு கிராமங்களின் ஊராட்சி மன்றத் தலைவர் காளையன் (ரஜினிகாந்த்). அவரின் ஒரே தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). அவருக்கு அண்ணனாக, தாயாக, எல்லாமுமாக இருந்து உயிருக்கு உயிராக வளர்க்கிறார் காளையன். இந்நிலையில் காளையன் தனது தங்கைக்கு திருமணம் பேசி முடிக்கிறார்.ஊரே திருவிழாக் கொண்டாட்டத்தில் திளைக்க, திருமணத்திற்கு முதல் நாள் தங்க மீனாட்சி திடீர் என காணாமல் போகிறார். காணாமல் போன தங்கை திரும்ப கிடைத்தாளா, இல்லையா? அவரின் கதி என்ன? அவளை கடத்தியது யார் என்பது உளப்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதி கதை.
‘முரட்டுக்காளை’ படத்துல ரஜினியின் கேரக்டர் பேரு ‘காளையன்’ அது சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்சுச்சு.சரி,இதுவும் அப்படி ஒரு ‘ஹிட்’டை குடுக்கட்டுமேன்னு நெனச்சு இந்தப்படத்துலேயும் ரஜினிக்கு இந்த பேரை வச்சுருப்பாங்களோ என்னவோ, ரஜினியும் பேருக்கு ஏத்தமாதிரி சும்மா ஜல்லிக்கட்டு காளை மாதிரி படம் முழுதும் துள்ளிக்கிட்டு வந்தாலும், வயசாகுதுல்ல. முதிர்ச்சியும், களைப்பும் அதுக்கு பெரியா தடையாக அமைந்து விடுகிறது. கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு பாசமான தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காங்க
வழக்கறிஞராக வரும் நயன்தாரா, வெறுமனே வந்து போறாங்க. குஷ்பு ,மீனா,லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், சதீஷ், சத்யன், குலப்புள்ளி லீலா, வேல ராமமூர்த்தி, ன்னு இருக்காங்களே ன்னு கேட்கீறீங்களா அவங்களும் படத்துல இருக்காங்க அவ்வளவுதான்.இமானின் இசையில் அண்ணாத்த, சார சாரக் காற்றே, வா சாமி பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை இரைச்சல் வெற்றி பழனிசாமியோட ஒளிப்பதிவு கலர்ப்புல். பல இடங்களில் லாஜிக் மிஸ் ஆவது நமக்கு அலுப்பையே அடைந்து விடுகிறது.தேவையற்ற தேவையற்ற மாஸ் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். இயக்குனர் சிறுத்தை சிவா. முதல் பாதி ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால், அது எடுபடாமல் போனது சோகம். பிற்பாதி ஒரு சீரியல் டிராமா மாதிரி அமைந்து விடுகிறது .ரஜினியும், இடைவேளையும் ஓகே.ஆனால் இப்படத்துக்கு காமெடி கை கொடுக்கவில்லை.
மொத்தத்தில் ‘பிரியாணி’யை எதிர்பார்த்து சென்ற ரஜினி ரசிகர்களுக்கு ‘சாம்பார்’ சாதம் பரிமாறப்பட்டு இருக்கிறது.மொத்தத்தில் எதிர்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமே.