இயக்குனர் கவுதம் மேனன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், ’காக்க காக்க’ படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் கேரக்டரான அன்புச்செல்வன் என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளதால் இப்படம் சூர்யா நடிப்பில் வெளியானமா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் பலரும் எழுப்பி உள்ளனர்.
இப்படத்தை வினோத் குமார் என்பவர் இயக்குகிறார். சிவா பத்மாயன் என்பவரது இசையில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்.
இது குறித்து படக்குழு , எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.