உலகநாயகன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்-5 நிகழ்ச்சி முந்திய சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சின்ன பொண்ணு வெளியேறியிருந்தார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தவாரம் நாமினேட் ஆகியுள்ளவர்கள்,அபிநய், அக்ஷரா ரெட்டி, சிபி, இசைவாணி, ஐக்கி பெரி, நிரூப், மதுமிதா, பவனி ரெட்டி, சுருதிஆகியோர் தான்.
இவர்களில், அபிநய் மற்றும் சுருதி ஆகிய இருவர் மட்டுமே குறைந்த வாக்குகளுடன் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்கிறது பிக்பாஸ்-5 வட்டாரம்.இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின் படி ‘காயினை கைப்பற்றியுள்ள சுருதி பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.