விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா சுந்தர். இவர் தற்போது திரைப்படங்களிலும் பின்னணிப்பாடல்கள் பாடி வருகிறார்.தெலுங்கு படங்களிலும் நிறைய பாடல்கள் பாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தனது வருங்கால கணவருக்கு தன்னை விட ஒரு வயது குறைவு என்றும் (மாளவிகாவுக்கு வயது 33 ) குறிப்பிட்டுள்ள பாடகி மாளவிகா,
‘எனது ‘33 வயதில் சரியான ஒரு நபரை தேர்வு செய்துள்ளேன்’ பெண்ணை விட பையனுக்கு வயது அதிகம் ஆக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை ஒரு பிரச்சினை கிடையாது என்றும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மரியாதையுடன் இருக்க வேண்டும் அவ்வளவு தான்’ என்றும், தனது வருங்கால கணவருக்கு லிப்கிஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.