கோவாவில் சர்வதேசத் திரைப்பட விழா வரும் 20 ம் தேதி முதல் 28 ம் தேதிவரை நடக்க உள்ளது.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள நடிகை சமந்தாவுக்கு அழைப்பு அனுப்பபட்டு உள்ளது.
இதன் மூலம் கோவா திரைப்பட விழாவில் உரையாற்றப்போகும் முதல் தென் இந்திய நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் சமந்தாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விவாகரத்து அறிவிப்புக்கு பின் நடிகை சமந்தாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகை டாப்ஸி தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் புதுப்படம் ஒன்றில் நடிகை சமந்தா நடிக்க உள்ளார்.
சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கவிருக்கும் புதுப்படத்திலும் நடிகை சமந்தா கமிட்டாகியுள்ளார் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள “சாகுந்தலம்” , “காத்துவாக்குல ரெண்டு காதல்” ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.