கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன்.தொடர்ந்து நடிகர் தனுஷின் “வேலையில்லா பட்டதாரி2“ மற்றும்ஹரிஸ்கல்யாணுடன் “பியார் பிரேமா காதல்“ படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ்ஷுடன் “காதலிக்க யாருமில்லை“, விஷ்ணு விஷாலுடன் “எஃப்ஐஆர்“, பிரபுதேவாவுடன் “பொய்க்கால் குதிரை”, “திசேஸ்“ போன்ற படங்களிலும் மிகவு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில்,சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக வளம் வரும் ரைசா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
மேலும் ரசிகர்களுடன் வீடியோ உரையாடலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்,வலைதள உரையாடலின் போது ரசிகர் ஒருவர் ரைசாவிடம், “லிவ்விங் டூகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா?“ என அதிரடியாய் கேள்வி எழுப்ப,
.இதற்கு சற்றும் அசராத நடிகை ரைசா,செம ‘தில்’லாக “லிவிங் டூகெதர் ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்“ என்று பதிலளித்துள்ளார்.