சிறுத்தை சிவாவுக்கு அடுத்தபடியாக நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தன்னை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பை அஜித் இயக்குநர் எச். வினோத்துக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத்தும் அஜித்தை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு,தற்போது அஜித்த்தின் மாஸான நடிப்பில் ‘வலிமை’ படத்தை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
‘தல’ அஜித் வெறித்தனமாக நேசிக்கும் பைக் ரேஸ் காட்சிகள் நிறைந்த படமாக வலிமை படத்தை இயக்கி உள்ளார். மேலும் இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பதால் சண்டைக்காட்சிகளும் வேற லெவலில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.
விரைவில் வெளியாகவுள்ள வலிமை படத்தை தொடர்ந்து அடுத்த படமும் வினோத் இயக்கத்திலேயே அஜித் நடிக்க உள்ளார் என்றும் குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில், மங்காத்தா ஸ்டைலில் பக்கா’நெகட்டிவ்’ கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வலிமை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ராஜ் ஐயப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் தல அஜித்தின் அனுமதியுடன் அவருடைய வாட்ஸப் ஸ்டேட்டஸை பகிர்ந்துள்ளார்.
அதில் “ஏழை, மிடில் கிளாஸ், பணக்காரன் என்பது ஒருவரின் பொருளாதாரத்தை குறிக்கும், குணத்தை அல்ல. அனைத்து சமுதாயத்திலும், நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர்.
ஆதலால், ஒருவரை அவரின் பொருளாதாரத்தை வைத்து ஒருவரின் குணத்தை தீர்மானிப்பதை நிறுத்துவோம். அனைவரும் விழியுங்கள்!!!” என கூறியுள்ளார்.