இயக்குனர் விஜய், தற்போது இயக்கி வரும் ‘டெவில்’ என்ற திகில் படத்தை மேலும்,மேலும் மெருகேற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளார் . பிரபுதேவா – தமன்னா – சோனு சூட் ஆகியோர் நடிக்கும் இந்த படம் தமிழ் – தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது..நடனம் , நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல்வேறு துறைகளில் பயணித்து வரும் பிரபுதேவா, இந்த படத்தில் பத்து வருடம் கழித்து கதாநாயகனாகவும், கதாநாயகியாக தமன்னாவும் நடித்து வருகின்றனர்.இந்த படத்தில் இயக்குனர் விஜயோடு இணை கதாசிரியராக கை கோர்த்திருக்கிறார், உலகளவில் புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் – கதாசிரியர் பவுல் ஆரோன். இது குறித்து, இயக்குனர் விஜய் கூறியதாவது,“இந்த தருணத்தை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நான் ‘சைவம்’ திரைப்படத்தின் சவுண்ட் ரெகார்டிங்கில் இருக்கும் போது தான் எனக்கு குணல் ராஜன் என்னும் ஹாலிவுட் சவுண்ட் ரெகார்டிஸ்ட் மூலம் பவுல் ஆரோனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது நாங்கள் இருவரும் சைவம் படத்தை பற்றி கலந்துரையாடினோம். தற்போது ஆரோன் முன்வந்து எங்கள் படத்திற்காக கதை எழுதுவதை நினைக்கும் போது மெய்சிலிர்த்து போகிறேன். இதைவிட எனக்கு பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது” என்கிறார்.