கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் ‘தள்ளிப்போகாதே’ என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ராசாளி…எனத் தொடங்கும் இரண்டாவது பாடலையும் வெளியிட்டுள்ளனர் இப்பாடலை,ஏ.ஆர்.ரஹ்மான் அந்த காலத்தில் வெளியான ‘முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம் ஆகிய பாடல்களை காப்பியடித்தே ரஹ்மான் இப்பாடலை உருவாக்கியிருப்பதாக, பலரும் சமூக வலைத்தளங்களில் ரகுமானை விமர்சித்து வருகின்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான் இப்பாடல் குறித்து தன்னுடைய முழு விளக்கத்தையும் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.“அச்சம் என்பது மடமையடா திரைப்படத்துக்காக உருவாக்கிய ராசாளி பாடலில் ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டு செல்லும் சிறு முயற்சி இது. புதிய இசையும் மரபுசார் இசையும் இணையும்போது கிடைக்கும் அனுபவம் இது.” என்று வேறு வழியில்லாமல் ‘ஒப்புதல்’ வாக்குமூலம் அளித்திருக்கிறார்.