“போடா …..யிரு “என்று எவ்வளவு சாதாரணமாக சொல்லி ஒதுக்குகிறோம் .நமது தலை மீது கவுரவமாக அமர்ந்திருக்கும் அந்த முடிக்கு எவ்வளவு காஸ்டலியான ஆயில், ஷாம்பூ ,சாயக்கலவைகள்….!
அந்த தலை முடிக்கு சினிமாவில் எத்தகைய முக்கியத்துவம் தரப்படுகிறது தெரியுமா?
ஸ்டைலிங் என்பது முக்கியமான அம்சம். தங்களது தலை முடியை பராமரிப்பதற்கு மும்பையில் இருந்து ஆட்களை வரவழைக்கிறார்கள் நடிக ,நடிகையர் ! வரவழைக்கும் வல்லுநர்களுக்கு அவர்களுக்கு மூன்று உதவியாளர்கள் ,! தங்குமிடம் ,உணவு ,தினசரி பேட்டா,தண்ணி அடிக்க தனிக்காசு…இப்படி உல்லாச வாழ்க்கை தயாரிப்பாளர்களின் செலவில்.!
பெரிய நடிகர்கள் ,நடிகைகள் பெர்சனல் ஸ்டைலிஸ்ட் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களது ஒரு நாளைய சம்பளம் 1.5 லட்சம்.!!!
இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடித்துவரும் ராம் சரனுடைய ஸ்டைலிஸ்ட்டின் சம்பளம்தான், மேலே சொல்லப்பட்டிருக்கிறது.
அல்லு அர்ஜூனுக்கும் இதே கதைதான்!