ஜெய் பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று திரண்டுள்ளனர்
இந்நிலையில் சூர்யா தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”என் மீது அனைவரும் காட்டும் இந்த அன்பு மிகவும் அலாதியானது என்றும், இந்த அன்பை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றும், நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுக்கு என்றும் நன்றி உடையவனாக இருப்பேன் என்றும், நன்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்றும், எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊🏼
— Suriya Sivakumar (@Suriya_offl) November 17, 2021