சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தை அமெரிக்காவில் கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெளியிட உள்ளது.இந்நிறுவனம் ஏற்கனவே ’பாகுபலி-2 படத்தை’ அமெரிக்காவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.