Saturday, January 16, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

வேந்தர் மூவிஸ் மதன் திடீர் மாயம்! தற்கொலையா !பரபரப்பு கடிதம் சிக்கியது!!

admin by admin
May 29, 2016
in News
0
601
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

vendar-mathan-415x280வேந்தர் மூவீஸ்பட நிறுவனம் ஆதி நடித்த “அரவான்” படத்தின் மூலமாக 2011ம் ஆண்டு S.மதன் திரைத்துறையில் நுழைந்தார். பின்னர் அன் நிறுவனம் விஷால் நடித்த “பாண்டிய நாடு” திரைப்படத்தை வெளியிட்டது. பின்னர் சிவா நடித்த “தில்லு முல்லு” படம் மூலமா தயாரிப்பை ஆரம்பித்தார் மதன். வேந்தர் மூவீஸ் நிறுவனம் திரைப்படம் தயாரிப்பதை விட விநியோகம் செய்வதில் மிக அதிக கவனம் செலுத்தி சுமார் இருபது படங்களுக்கும் மேல் விநியோகம் செய்துள்ளனர்.

திரைப்படத்துறை மட்டுமின்றி, வெளியுலகிலும் மதன் SRM கல்லூரி மற்றும் SRM குழுமம் நிறுவனர் பச்சைமுத்து (என்னும்) பாரிவேந்தர் அவர்களுடைய பினாமி என்று சொல்லப்பட்டு வந்தது. வேந்தர் மூவிஸின் பல திரைப்பட விழாக்களில் பச்சைமுத்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி SRM கல்லூரிகளில் எந்த ஒரு மாணவன் சீட் தேவை என்றாலும், மதனை சந்திப்பது வழக்கம் சில நேரங்களில் அது அவசியமாகவும் இருந்துள்ளது. பெரும்பாலும் SRM கல்லூரியில் சேரும் மாணவர்கள் தாங்கள் செலுத்தப்பட வேண்டிய நன்குடை(கேபிடேஷன் பீஸ்-Capitation Fees) மதனிடம் செலுத்தப்படுவது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த நன்கொடை பணம் மதன் மூலமாக SRM கல்லூரிக்கு சென்றடைந்து விடுமாம். SRM குழுமம் நிறுவனர் பச்சைமுத்து’க்கு மிக நெருக்கமானவர் மற்றும் நம்பிக்கையானவராகவும் இருந்துள்ளார் வேந்தர் மூவிஸ் மதன்.

You might also like

தமிழ்நாடு சி.எம்.க்கு எத்தனையாவது இடம்? 30 சதவிகிதமே ஆதரவு!!

சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்

விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!

இப்படி இருக்கும் சூழலில் சிலர் மதனை பற்றி பச்சைமுத்து’விடம் மதனை பற்றி தவறாக சொல்லி இருவருக்குள் ஒரு பிளவை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மதனுக்கும் பச்சைமுத்து’க்குமான சுமுக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக “வேந்தர் மூவீஸ்” மதன் ஐந்து பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய “வேந்தர் மூவீஸ்” லெட்டர் பேட்டில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில் “காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டும்மின்றி SRM கல்லூரி சம்மந்தமாக சில முக்கிய தகவல்களை பற்றியும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மதன். கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்ற மதன் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்பது இதுவரை எந்த தகவலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. மதன் இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கடிதத்தை எழுதிவிட்டு காணாமல் சென்றுள்ளதால், SRM கல்லூரி மற்றும் SRM குழுமத்திற்கு வருமானவரி துறையினர் மற்றும் காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என சொல்லப்படுகிறது. மதனின் இந்த கடிதத்திற்கு SRM குழுமத்தின் சார்பிலோ அல்லது அதன் நிறுவனர் பச்சைமுத்து என்ன சொல்லபோகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மதன் தான் கடிதத்தில் எழுதியுள்ளதை அப்படியே கிழே குறிப்பிட்டுள்ளோம்:

என் நண்பர்களுக்கு, என் உயிர் வேந்தருக்கு, என் குடும்பத்தினருக்கு,

ஒரு zeroவில் தொடங்கி, zeroவில் முடிகிறது. என் வாழ்கை கடைசியில் என்ன ஒரு நிம்மதி, காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணம் அடைந்தால் அடுத்த ஜென்மம் இல்லை. எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன். அப்புறம் என்ன இந்த letter. என்னிடம் Admission பணம் தந்தவர்களும், எனக்காக சினிமாவில் முதலீடு செய்தவர்கள் பயப்பட வேண்டாம். பணம் SRM நிறுவனத்திலும் mgm(ODY) நிறுவனத்திலும் safe ஆகா உள்ளது. நீங்கள் அவர்களிடம் பெற்று கொள்ளலாம். யா என் வாழ்வில் எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து என்னை எந்த உலகுக்கு காட்டியவர். SRM நிறுவனம் என்றால் Admission, சினிமாவில், கட்சியில் (IJK) மதன் தான் என்று பெயரை கொடுத்தவர். என் தலைவருக்காக வாழ்ந்தேன். தலைவனால் போகிறேன். SRM group No (1) ஆகா வர வேண்டும் என்று பாடுபட்டேன். SRMக்கு எந்த ஒரு பிரச்னை என்றால் முதலில் நன் நின்றேன். SRM என்று ஒரு universityயாக வளர்வதற்கு எங்கள் Group ஒரு காரணம். எல்லா seatயும் full. எல்லா இடத்திலும் வேலை. எப்படி சாத்தியம். இது Vendharக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் SRM இல்லாத எல்லா College Chairmanக்கும் மதனை தெரியும. என் என்றால் எனக்கு வேந்தர் மேல் உள்ள வெறி. அவர் மனம் வருதபடகூடது என்று அவருக்காக எல்லாம் செய்தேன். மாணவர்கள் கல்லூரியில் செலுத்தும் பணம் குறைவாக இருக்கும். ஆனால் கல்லூரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும். எப்படி? எல்லாம் என் கையில் இருந்து. என் முயற்சி. என் தலைவனிடம் பேர் ம்வாங்க வேண்டும். தலைவர் எப்போதும் என்னை கூட வைத்து கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம். என்னிடம் 8 வருடமாக உள்ள பெற்றோர் Address, மாணவர்கள் Phone நோ உள்ளது நீங்கள் விசாரிக்கலாம். Tiruchi Medical College Permission கிடைக்கவில்லை. இரண்டு வருடமாக நடக்கவில்லை. யா முகம் வாடியது. நான் என்ன செய்தேன். எவ்வளவு செய்தேன் என்று அவருக்கு தெரியாது. ஆனால் என் நண்பர்களுக்கு தெரியும் எல்லாத்துக்கும் Proof உள்ளது. இந்த வருடம் P.6 and U.6 Medical admission NEET Exam இருந்தும் 102 Seat Fullஆகா உள்ளது SRMயும் MGMமியும். எப்படி? மாணவர்கள் Tiruchi Medical Collegeம் 1 வருடமாக வெயிட் செய்கிறாகள் எப்படி? எல்லாம் நான் பட்ட உழைப்பு. IJK Party கட்சி தொடங்கி முதல் மாநாடு. Trainல் வெளி மாநில மாணவர்கள், 100 Bus மாணவர்கள் கலந்து கொண்டனர். எப்படி Bihar. election. 14 தொகுதில் IJK நின்றது எப்படி? கட்சி தொடங்கி 6 மாதம் இருக்கும் பொது எப்படி MLA.[Tirunelvi] election, Southல், IJK எப்படி வந்தது, BJP மாநாடு., Counsilor election., Puthukotai Bye election., Perabalur MP election, யார் செலவு செய்தது நான் தான். நான் பொய் சொல்லவில்லை இல்லத்தை இணையதளத்தில் UTubeலிம் பார்க்கலாம். [சினிமா] ஒரு படத்தில் Director shankar ஐயா பெயரை கேவலபடுதியதால் வந்தது தான் இந்த வேந்தர் மூவீஸ். எத்தனை படம் பண்ணினோம் எல்லாம் நஷ்டம். தலைவா படம் இவர் பேர் போட்டதால் படத்தையே நிறுத்தி விட்டார்கள். linga, Payumpuli எல்லாம் நஷ்டம் இருந்தாலும் Vendhar movies நிற்கவே இல்லை. இன்னும் படம் எடுத்து கொண்டு இருக்கிறது. என் ஐயா பெயரில் உள்ளது. அதனால் எல்லாம் நல்ல தானா போகுது அப்புறம் ஏன் இந்த முடிவு! ஐயா குடும்பத்துக்கு சந்தேகம் வருது. என்ன சந்தேகம். மதன் இவர் பையனா? இவர் என் மதனுக்கு என் முதலிடம் கொடுக்கிறார். ஐயாவிற்கு Presssure. ஆனால் என்னை விட்டு கொடுக்கவில்லை எனக்கு வந்தது என்ன? Income tax raid 6 ½ கோடி போச்சு., ஒரு பொய் என் மேல் MR. Ravi recommadationள்ள, Ravi சார் கட்சியில் வரார் Admissionக்கு மதனை வரவிட கூடாது. கட்சியில் மதனை வெளியே கொண்டு வர வேண்டும் ஐயாவையும் மதனையும் பிரிக்கணும். ஏதோ சொத்தை என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என்று, Kerala போய் பில்லி சூனியம் வர வைத்து விட்டாச்சு. எனக்கு அதை பற்றி கவலை இல்லை. ஆனா கடந்த 6 மாதமாக ஐயா என்னிடம் பேசுவது இல்லை. Phone கட்டு பண்ணார் நேத்து கூட காசு அனுப்ப சொல்லு Ranga Babu சார் போன் பண்றார். Sukumar phone பண்றார். நான் யாருக்க வாழ்ந்தனோ, யாருக்கு செலவு பண்ணனோ அவர் பேசுவது இல்லை. Electionக்கு கூப்பட வில்லை. அதனால் இந்த முடிவு. நான் போறேன். Already இது புதுசு இல்லை Nov 30 Try பண்ணினேன் முடியல் So இப்போது நான் போறேன். என் கொளிக்கைகள் Vendhar familyக்கு மதன் போயிட்டானே SRM அவருக்கு என்ன சம்மதம் இல்லை ரவி சொல்வார். ஆனால் இந்த தடவை அது நடக்காது.
(1) 8 வருடமாக நான் SRMக்கு போட்ட student list நான் இதில் சேர்த்து இருக்கிறேன்.
(2) Vendhar movies, Vendhar TV Bank Statement connection பார்த்தால் தெரியும்.
(3) Income tax raidயில் எடுத்த Payment ரேபுந்து SRM வாங்கி உள்ளது.
(4) Vendhar TV Satellite Telecast ஆகும் படங்களில் நிறைய படங்கள் என் பெயரில் உள்ளத இருக்கும். அதுக்கு எந்த ஒரு Payment நான் வாங்கி இருக்க மாட்டேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு. நான் இல்லாவிட்டால் என்ன. என் உயிர் நண்பர்கள் Pressக்கு வருவார்கள்.
நான் last ஆக கேட்பது என்னனா.
இந்த நான் அனுப்பிய list P6/U6 மாணவர்கள் எல்லாம் College சேரனும்.
அவர்களிடம் வாங்கி பணம் உங்களிடம் முழுமையாக கொடுக்க பட்டு உள்ளது.
NEET வந்தால் அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கொடுக்கப்படவேண்டும்.
Vendhar movies மேல் எந்த கடனும் வர கூடாது. இதையும் மீறி நீங்கள் என் நண்பர்களோ, என் குடும்பத்தையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவுளும் மன்னிக்க மாட்டார். So ஐயா தான் உங்களை பார்க்காமல் போகிறேன் என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என வும் திரையுலகில் பரப் பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Previous Post

‘மீன் குழம்பும் மண்பானையும்’

Next Post

முஸ்லீம் தொழிலதிபரை மணக்கிறார் பிரியாமணி!

admin

admin

Related Posts

தமிழ்நாடு சி.எம்.க்கு எத்தனையாவது  இடம்? 30 சதவிகிதமே ஆதரவு!!
News

தமிழ்நாடு சி.எம்.க்கு எத்தனையாவது இடம்? 30 சதவிகிதமே ஆதரவு!!

by admin
January 16, 2021
சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்
News

சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்

by admin
January 16, 2021
விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!
News

விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!

by admin
January 16, 2021
 ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!
News

 ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!

by admin
January 15, 2021
தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’!
News

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’!

by admin
January 15, 2021
Next Post
முஸ்லீம் தொழிலதிபரை மணக்கிறார் பிரியாமணி!

முஸ்லீம் தொழிலதிபரை மணக்கிறார் பிரியாமணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்

சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்

January 16, 2021
விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!

விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!

January 16, 2021
 ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!

 ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!

January 15, 2021
தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’!

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’!

January 15, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani