‘லிவிங் டு கெதர்’ பாணியில் வாழ்ந்து வருவதாக கூறப்படும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் ஆகி விட்ட நிலையில், விரைவில் இருவரும் தங்களது திருமணத்தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை மாறி மாறி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நயன்தாரா தனது 37வது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார் இரண்டு பெரிய கேக் மற்றும் 4 குட்டி கேக்குகளுக்கு மத்தியில் கிளிட்டர் உடையில் செம க்யூட்டாக நடிகை நயன்தாரா நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் நயன்தாரா. இந்த சர்பிரைஸ் பார்ட்டிக்கு விக்னேஷ் சிவன் தான் ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஆங்கிலத்தில் நயன் மற்றும் , லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட இரண்டு கேக்குளை வெட்டியிருக்கிறார் நயன்தாரா.மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு சமூக வலைதள பக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டரை பகிர்ந்து ,, ஹேப்பி பர்த்டே கண்மணி தங்கமே.. மை எல்லாமே.என்றும் பதிவிட்டுள்ளார் .