மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில், ஷாருக் கானுடன் நடித்திருந்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் தனது நீண்டகால காதலர் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட் இனாஃப் என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஜீன் குட் இனாஃப் தம்பதிக்கு வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இது குறித்த தகவலை ப்ரீத்தி ஜிந்தா தமது சமூக வலைதளப்பக்கத்தில், “ஜெய் ஜிந்தா குட் எனாஃப் மற்றும் கியா ஜிந்தா குட் எனாஃப் ஆகிய எங்கள் இரட்டை குழந்தைகளை எங்களது குடும்பத்திற்கு வரவேற்பதில் ஜீனும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் இதயங்கள் நன்றியுடனும், மிகுந்த அன்புடனும் நிரம்பியுள்ளன. எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய கட்டத்தில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். நம்ப முடியாத இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை தாய் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அன்புடன் – ஜீன், ப்ரீத்தி, ஜெய் & கியா” என்று குறிப்பிட்டுள்ளார்.