தமிழில் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியாமணி.ஆனால், கடந்த சில வருடங்களாக நடிக்க வாய்ப்பில்லாமல்சின்னத் திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார்.
மேலும் மும்பையைச் சேர்ந்த முஸ்லீம் தொழிலதிபர் முஸ்தபா ராஜை இவர் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த வெள்ளியன்று பிரியாமணி வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது இந் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் ,குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதை பிரியாமணி தனது டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.