மாயா படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா இயக்குநர் அஷ்வின் சரவணனுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் ,இக்கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘கனெக்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை Rowdy Pictures சார்பில், விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.. பரபர தருணங்கள் நிறைந்த ஹாரர் திரில்லராக உருவாகவுள்ள இப்படம் ரசிகர்களுக்கு புத்தம் புதிய சினிமா அனுபவத்தை தரும். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் பங்குகொள்கிறார்கள்.
பாலிவுட் பிரபலமான அனுபம் கெர், நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.என்கிறார் இயக்குனர் அஷ்வின் சரவணன்
இப்படத்தின் கதையை காவ்யா ராம்குமாருடன் இணைந்து இயக்குனர் அஷ்வின் சரவணன் எழுதியுள்ளார். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்,