காதலித்துப் பிரிந்த சிம்பு – நயன்தாராவை வைத்து ஒரு படம் எடுத்தால் பிச்சுகிட்டு ஓடும் என்ற நம்பிக்கையில் இருவரை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார், சிவா (சிம்பு).உடன் நண்பன் வாசு (சூரி).சிம்புவுக்கு ‘பைக்’ டிரைவராம், பார்ரா….! சென்னையில் ஒரு அறை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போவது, ஊர் சுற்றுவது என ஜாலி யாக வலம் வருகிறார்கள்.ஆன்ட்ரியாவை உருகி உருகிக் காதலித்துப் பிரிகிறார்.இந்நிலையில், மகன் சிம்புவுக்கு அப்பா ஜெயப்பிரகாஷ் திருவையாறில் வரன் பார்க்கிறார். அவர்தான் மைலா (நயன்தாரா).அவரைப் பார்த்ததும் சிம்புவுக்குப் பிடித்து விடுகிறது. ஆனால் தன் பழைய காதலி பிரியா (ஆன்ட்ரியா) பற்றி நயன் கேட்டதால் அதிர்ச்சியடையும் சிம்பு , சரி நயன் நமக்கு இல்லை என நினைக்க, ஆனால் நயனின் சம்மதத்தோடு எதிர்பாராதவிதமாக நிச்சயதார்த்தம் நடக்கிறது. இருவரும் கல்யாணத்துக்கு முன்பே காதலர்களாக வலம் வரும்போது, இருவரின் அப்பாக்களின் இரவு குடி உளறலால், ஏற்படும் சில திருப்பங்களால், சிம்பு – நயன் கல்யாணம் நின்று விடுகிறது. இதையடுத்து இருவரின் திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் கதை.இன்றைய காதலர்கள் எப்படிப் பேசுவார்கள்? எப்படி நடந்துகொள்வார்கள் என்பதையெல்லாம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்.இயக்குனர் பாண்டிராஜ். அவ்வப்போது சூரி அடிக்கும் கமெண்டுகள் எரிச்சல் ரகம்! அஜித்தின் ரசிகர் சிம்பு .ஆனால் விஜய்யின் ஸ்டைலில் படம் முழுக்க,வசனம் பேசுவதாகக் கூறிக் கொண்டு வார்த்தைகளை கடித்து கடித்துத் துப்புகிறார் சிம்பு. காதில் ரத்தம் வராத குறைதான். உடனடியாக சிம்பு இதை மாற்றிக்கொண்டால் அடுத்த படத்துக்கு தேறுவார்! அதே போல் சிம்பு,நயன் காதல் காட்சிகள் படு செயற்கை! நோ கெமிஸ்ட்ரி! சந்தானம் இரண்டே இரண்டு காட்சிகளில் வருகிறார். வெறும் வசனங்களால் மட்டுமே படத்தை நகர்த்தி செல்வதால் நமக்கு அலுப்பு தட்டி விடுகிறது. பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகூட்டுகிறது. கே.எல்.பிரவீனின் எடிட்டிங் பல இடங்களில் யாருக்கோ கட்டுப்பட்டு நகர்ந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை! பரவாயில்லை. குறளரசனின் இசையில் ‘காத்தாக வந்த பொண்ணு’ பாடலும் அது பாட லாக்கப்பட்ட பின்னணியும் இளைஞர் களைக் கவர்கின்றன. குறளரசன் இன்னும் நன்றாக தேற வேண்டும்!இயக்குனர் பாண்டிராஜ் சிம்பு, நயன் என இருவரின் மீது வைத்த நம்பிக்கையை கதையின் மீது வைத்து உருவாக்கியிருந்தால் தேறியிருக்கும்! சிம்பு-நயன் இருவரும் மூன்று முறை திருமணம் செய்துகொள்ளும் காட்சியை படமாக்கியது ரசிகர்களுக்ககவா?சிம்புவுக்காகவா? மொத்தத்தில் சிம்புவின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.RATING;2/5.