சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் மாநாடு.இப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில்,கடந்த தீபாவளி அன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.பின்னர் ஒத்திவைக்கப்பட்டு . நவம்பர் 25-ஆம் தேதியான நாளை என படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அறிவித்தப்படி மாநாடு படம் நாளை ரிலீஸ் ஆகாது என படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்.
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.
இப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் தற்போது ஏற்கனவே அறிவித்தப்படி நாளை மாநாடு படம் ரிலீஸ் செய்யப்படும் என இயக்குநர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாளை முதல் மாநாடு’ என சிம்பு போஸ்டரைபகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் தள்ளியுள்ளது.