ஒரு காலத்தில் காமெடி என்றாலே கவுண்டமணி – செந்தில் தான். நடிப்பதற்கு வாய்புகள் குறைந்த பிறகு செந்தில் அரசியலில்,அதிமுக கட்சியில் இணைந்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் சமீபத்தில் நடந்த தமிழக சட்டபேரவை தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். சில வாரங்களுக்கு முன்பு செந்தில் உடல் நல குறைவால் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவியது. கடைசியில் அது வதந்தி என தெரியவந்தது. இந்த வதந்தி மீண்டும் பரவிவருகிறது. தற்போது இதுபற்றி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்பற்றி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.கவினரின் தூண்டுதலின் பேரால் இது நடப்பதாக புகார் அளித்துள்ளார்.