தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர், யோகிபாபு. இவரது நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் ‘பன்னிகுட்டி’. இந்தப்படத்தினை ‘கிருமி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அனுசரன் முருகையா இயக்கியுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
அன்மையில் வெளியான ‘பன்னிகுட்டி’ படத்தின் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. முக்கியமான கதாபாத்திரத்தில் கருணாகரன், மற்றும் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி. கஜேந்திரன், லக்ஷ்மி பிரியா தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பன்னிகுட்டி படத்தின் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடும் உரிமையினை ‘11.11 புரடக்ஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் பிரபு திலக் வாங்கியுள்ளார்.
கடந்த ஆண்டே திரைக்கு வரவிருந்த நிலையில் கொரொனா காரணமாக தற்போது வெளியாகவிருக்கிறது.