ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர். லிங்கதுரை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம்,பொண்ணு மாப்பிள்ளை’.இதில், மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும் புதுமுகம் ரூபிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். சத்யன் வில்லனாக நடித்துள்ளார்.
இவர்களுடன் வடிவுக்கரசி, நந்தகுமார் ,ஆர்த்தி ,நெல்லை சிவா, கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.இயக்குநர் சேட்டிபாலனும் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.காலத்துக்கு ஏற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சேட்டிபாலன்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி கூறுகையில்,”நான் கிராமத்திலிருந்து ஒரு இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தேன்.ஆனால் சந்தர்ப்ப வசத்தால் தயாரிப்பு நிர்வாகியாகி விட்டேன். இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருந்த எனக்கு ஒரு படத்தைத் தயாரிக்க, இப்போது காலம் கனிந்துள்ளது.
இயக்குநர் சேட்டி பாலன் கூறிய கதை எனக்குப் பிடித்துப் போனதால் அவரை இயக்க வைத்து இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறேன் .படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் தூத்துக்குடி மணப்பாடு பகுதிகளிலும் மற்றும் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் எடுத்து முடித்திருக்கிறோம்.எங்கள் கனவையும் உழைப்பையும் அங்கீகாரம் செய்யும் வகையில் இயக்குநர் பார்த்திபன் எங்களின் பொண்ணு மாப்பிள்ளை படத்தை வாழ்த்தியிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. என்கிறார்.இப் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது
பதினாறும் (collection)பெற்று தர்மராஜ் வேலுச்சாமி &லிங்காதுரை பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்#PonnuMappilai.This is going to be a surefooted success for @Actor_Mahendran Producers DharamrajVelusamy RLingadurai of #பொண்ணுமாப்பிள்ளை #ZambaraEntertainment #ChettiBalan @PROSakthiSaran pic.twitter.com/mbAPNyEjMB
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 26, 2021