உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ்-5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், திடீரென கொரோனா தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு குணமாகும் வரை இந்த நிகழ்ச்சியை வேறு யார் தொகுத்து வழங்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
நாம் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று கூறியிருந்தநிலையில்,தற்போது இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியாகி உள்ளது.
அதில் மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் காட்சி உள்ளது. அது மட்டுமின்றி கமலின் அறிவிப்போடு இன்று ரம்யா கிருஷ்ணனும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கமலும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.