சென்னை அடையாறில் , ஒரு பெண்ணிடம் ஒரு இளைஞன் வம்பு செய்ததாகவும், அதை நேரடியாகப் பார்த்த சூர்யா அந்த இளைஞரை அடித்ததாகவும் கூறப்பட்டது. சூர்யாவால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரவீண்குமார் என்பவர்,சென்னை அடையாறு சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது, அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்று புகார் தெரிவித்திருந்தார்,இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து சூர்யா கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த இளைஞன் சூர்யாவிற்கு எதிராக கொடுத்த வழக்கை வாபஸ் பெற்று விட்டாராம். இதனால் இந்த பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது