டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார்.கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் டான் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தையடுத்து இயக்குநர் அட்லியின் உதவியாளர் அசோக் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு சிங்கப்பாதை என தலைப்பிடப்பட்டுள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் தந்தை-மகன் என இரட்டை வேடங்களை ஏற்றுள்ளதாகவும், தந்தை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவியும்,மகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.