பிரபல தெலுங்கு இயக்குனர் ஜி.அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் மற்றொரு பிரமாண்டமான படமான ‘பாகமதி’புதிய படத்தை யுவி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கவுள்ளார்.
மொட்டை தலையுடன் அடர்த்தியான மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஜெயராம் நடிக்கவுள்ளதாகவும் இந்த கேரக்டர் அவருடைய திரையுலக வாழ்வில் மறக்க முடியாத கேரக்டராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.