வலிமை படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீரென அஜித் தரப்பில் இருந்துவந்த வந்த அதிரடி அறிக்கை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது. அந்த அறிக்கை இதுதான்.
“பெரும் மரியாதைக்குரிய ஊடக, பெது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்,அஜித்குமார்” இப்படி ஏற்கனவே அதிரடியாக தனது ரசிகர் மன்றங்களை கலைத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அஜித்குமார் தற்போது மீண்டும் திடீர் அதிரடியாக ‘தல’ அறிக்கையை தனது மேலாளர் மூலமாக வெளியிட்டு இருக்கிறார்.
இதையடுத்து தற்போது இணையதளங்களில் #AjithKumar என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அஜித்குமாரின் அறிக்கையை பார்த்த ரசிகர்களோ, இனிமேல் ‘தல’ன் னு கூப்பிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜித்குமாரை பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் தல’ என அழைத்து வந்த நிலையில் தற்போது திடீர் என மறுப்பு தெரிவிக்க முக்கிய காரணமே ஒரே தல அஜித், ஒரே தல தோனி என்கிற ரசிகர்களின் மோசமான ஹாஷ்டேக் சண்டை தான் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.