‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவராகொண்டாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கடந்த இரண்டு வருடமாகவே தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக, படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா பாரிஸுக்கு சென்றுள்ளார். அவரைத்தொடர்ந்து ராஷ்மிகாமந்தனாவும், அதே பாரிஸுக்கு டூர் என்ற பெயரில் கிளம்பி சென்றவர், அங்கே படப்பிடிப்பு முடிந்தவுடன் இருவரும் மிகவும் ஜாலியாக ஊர் சுற்றி மகிழ்ந்துள்ளனராம்.
பின்னர் இருவரும் ஒன்றாகவே ஐதராபாத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.இச் சம்பவத்திற்கு பின்னர் இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கன்னட படங்களில் நடித்து வந்தபோது, நடிகர் ரக்சித் ஷெட்டிக்கும், இவருக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின் இருவரும் பிரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.