நடிகர் ஜிவி பிரகாஷ், அபர்ணதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த படத்தின் வெளியீட்டு விவகாரத்தில், இந்த படத்தை வெளியிட க்கூடாது என்று சமீபத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ஆனால் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என தீர்ப்பு கூறியிருந்தது இந்நிலையில் இது குறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “எத்தனை தடைகள், எத்தனை வேலிகள், எத்தனை இடையூறுகள் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயில் என்று பெயர் வைத்ததாலேயோ என்னவோ படாத பாடுகளை பட வேண்டியிருந்தது இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.