நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததுடன், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மொத்தம் 17 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.இந்த சந்திப்பின் போது லதாரஜினிகாந்தும் உடன் இருந்தார்.இந்த சந்திப்பு குறித்து சசிகலா தரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில், ‘சசிகலா நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்கள். ரஜினிகாந்த் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனை பற்றியும் கேட்டு அறிந்தார்.மேலும் ரஜினிகாந்தின் அவர்கள் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் சசிகலா தெரிவித்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.