அஜித்குமார் நடிப்பில், எச்..வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்துள்ளபுதிய படம் வலிமை இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அதோடு க்ளிம்ப்சில் இடம்பெற்ற அஜித்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் அதிலும் பைக்கிலேயே ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு அஜித் தாவும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து இயக்குனர் எச்..வினோத் கூறுகையில்,’இது பைக் கேங்க் பற்றிய கதை அல்ல. பைக் ரேஸ் காட்சிகளை முக்கியமாக கொண்டதாக இருந்தாலும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பற்றியது.அந்த கடத்தல் கும்பலை போலீஸ் அதிகாரியான அஜித் எப்படி கண்டு பிடித்து ஒழிப்பது தான் கதை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.