நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில்,அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா, ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ள இப் படத்தை புரமோட் செய்யும் விதமாக ‘ நயன்தாரா, கையில் ஒரு சுத்தியலுடன் ரத்த வெறியுடன், “காலம் ஒரு துரோகி, படுபாவி, பிசினாரி,. நேரம் ஒரு நோய், பிரபஞ்சம் சூழும் பொய்” என்று வசனம் பேசி மிரட்டும் பாடல் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியதாவது,‘ராக்கி’ ஒரு கேங்ஸ்டர் கதை. அந்த உலகத்தில் ஒரு மென்மையான கதையும் இருக்கும்.ஜெயிலில் இருந்து விடுதலையாகும் ஒரு கேங்ஸ்டர் திருந்தி வாழவேண்டும் என்று நினைப்பவன்.
தன் தங்கையை தேடி போகும் போது அவனுக்கு ஏற்பட்டு சம்பவம் மீண்டும் பழைய பாதைக்கே தள்ளுகிறது இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதில் இலங்கை அகதிகளை பற்றியும் சொல்லியிருக்கிறோம் அது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்.
ஆக்சன் படம் தான் என்றாலும் எமோஷனல் காட்சிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும். 2004 ஆம் ஆண்டிலிருந்தே நானும்,இயக்குனர் விக்னேஷ் சிவனும் நண்பர்கள். முதலில் ‘ராக்கி’ கதையை ஆண், பெண் வெர்ஷனுக்காக தனித்தனியாகத்தான் எழுதினேன். அதில், பெண் வெர்ஷனில் நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது.
அவருக்கு கதை பிடித்திருந்தும் நடக்காமல் போய்விட்டது. அதன்பிறகுதான், வசந்த் ரவியை வைத்து இயக்கினேன். படத்தை பார்த்துவிட்டு ’நாங்களே உடனடியாக வெளியிடுகிறோம்’ என்றார்கள். அவர்கள் வந்தபிறகுதான் ‘ராக்கி’க்கு நல்ல கவனம் கிடைத்தது”என்கிறார்.