பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ’நாய் சேகர்ரிட்டர்ன்ஸ் ’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் இசையமைப்பு வேலைகள் லண்டனில் நடந்து வருகிறது.
இதற்காக படக்குழுவினருடன் லண்டன் சென்ற வடிவேலு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்தார். இந்நிலையில்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து உடனடியாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ‘ஓமிக்ரான்’ பாதிப்பு உள்ளதா என்ற ‘தக்பாத்’ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் ‘ஓமிக்ரான்’ பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் காணப்படும் ‘எஸ்-ஜீன் டிராப்’ கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 61-வயதாகும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.