டெய்லர் கடை நடத்தி வரும் விஷ்ணு விஷால், எம்.எல்.ஏ ரோபோ சங்கரின் வலது கை.விஷ்ணு விஷாலின் நண்பர் சூரி. இதே ஊரில் வசிக்கும் நிக்கி கல்ராணிக்கு போலீசாக வேண்டும் என ஆசை!.
விஷ்ணு விஷால் எம்.எல்.ஏ.விடம் இருப்பதால், நிக்கி கல்ராணியின் அப்பா விஷ்ணுவிடம் பத்து லட்சம் கொடுத்து தன் மகளின் போலீஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் வேண்டும் என்று கூறுகிறார். விஷ்ணுவும் தன்னுடைய காதலிக்காக பத்து லட்சத்தை வாங்கி ரோபோ சங்கரிடம் கொடுக்கிறார். அப்போது அமைச்சருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, சாகும் நிலையில் இருக்கும் அமைச்சர் ரோபோ சங்கரை அழைத்து தான் ஒரு இடத்தில் ரூ 500 கோடியை ஒரு இடத்தில்மறைத்து வைத்திருப்பதாகவும் அதை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துமாறும் கூறி இறந்து போகிறார். அந்த 500 கோடியை அபகரிக்க, திட்டம் போடும் அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா,ரூ 500 கோடி பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ள காரில் செல்லும் எம்.எல்.ஏ ரோபோ சங்கரை துரத்த , விபத்து ஏற்பட்டு ரோபோ சங்கர் கோமா நிலைக்கு செல்கிறார். இந்நிலையில், நிக்கி கல்ராணி போலீசாகி விடுகிறார்.ஆனால் அது தன் சொந்த முயற்சியால் தான் என தெரிந்து விட, தன் தந்தை கொடுத்த ரூ.1௦ லட்சத்தை விஷ்ணு விஷாலிடம் திரும்ப கேட்கிறார். இதற்கிடையில், ரோபா சங்கர் கோமா வில் இருந்து மீண்டாரா? பத்து லட்சம் திரும்ப கிடைத்ததா! விஷ்ணு விஷால் தன் காதலில் ஒன்று சேர்ந்தாரா? அந்த 500 கோடி எங்கு இருக்கிறது என்று ரவிமரியா கண்டுபிடித்தாரா?.இறுதியில்,என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை!
கதையின் நாயகர் முருகனாக, வெண்ணிலாக் கபடிக்குழு விஷ்ணு, யதார்த்த நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் எக்கச்சக்கமாய் ஸ்கோர் செய்திருக்கிறார். படத் தயாரிப்பாளரும் இவரே என்பதால் அதிலும் விஷ்ணு ஜெயித்திருக்கிறார். நிக்கி கல்ராணி ஆக்ஷன் கலந்த போலீசாக நடித்திருக்கிறார். போலீஸ் உடையிலும், மற்ற உடையிலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே தெரிகிறார். ஆட்டக்காரி புஷ்பாவை ஒரு பவுன் மோதிரத்துக்கு ஆசைப் பட்டு போலித் திருமணம் செய்துகொள்ளும் சூரி, விவாகரத்து கேட்டு, அலையும் காட்சிகள் குலுங்கிக்குலுங்கி சிரிக்க வைக்கின்றன! ‘நீ தான் புஷ்பா புருஷனா’ டயலாக் இனி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். ஷக்தியின் ஒளிப்பதிவில் குறையில்லை. இசையில் சத்யா இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.கதையின் நாயகர் முருகனாக, வெண்ணிலாக் கபடிக்குழு விஷ்ணு, யதார்த்த நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் எக்கச்சக்கமாய் ஸ்கோர் செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ சங்கர் சொல்லும் கதை திரையரங்கில் சிரிப்பு சரவெடி. இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஆடுகளம் நரேன், ரவிமரியா ஆகியோரம் தங்களது பங்கினை சிறப்பாகவே செய்துள்ளனர்.இயக்குனர் எழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்குமளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியை அதிகம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். பாராட்டுகள்! மொத்தத்தில் ‘லாஜிக்’கை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, இப் படத்தை பார்த்து வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம்!