தமிழ்ச்சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரங்களில் தனுஷ் முக்கியமானவர்.
இளம் வயதிலேயே சாதனைகளை தொட்டவர்.ஹாலிவுட் சென்றவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தவர் யார் என்பதில் தளபதி விஜய்க்கு கடுமையான போட்டியாளர் தனுஷ்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கமர்சியல் படங்களில் இவர்தான் முதலாமவர் என்கிற இடத்துக்கு முன்னேறி வருகிறவர்.
இவருடைய தணிக்க முடியாத ஆசை என்ன தெரியுமா?
“ரஜினிகாந்த் ,இளையராஜா இருவருடைய ‘பயோபிக் ‘கில் இவர் நடித்ததாக வேண்டும்”என்பதுதான்.!அந்த இருவருமே அவரை அதிக அளவில் கவர்ந்தவர்கள் என்கிறார் தனுஷ்.
தமிழக தயாரிப்பாளர்களில் யார் முன் வருவார்கள்?
நமக்கென்னமோ ,அந்த வாய்ப்பு கலைப்புலியாருக்குத்தான் இருப்பதாக தோன்றுகிறது.