கோலிவுட், பாலிவுட் என்று கலக்கிவரும் இயக்குநர் சுசிகணேசன் 2022 ம் ஆண்டு மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார்.
தற்போது இந்தியில் ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் சுசிகணேசன் தமிழில் இயக்கும் படத்தை அறிவித்துள்ளார். படத்துக்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று டைட்டில் வைத்துள்ளார்.
1980 களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க முழுக்க உண்மை சம்பத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இதன் திரைக்கதை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கவுள்ளது.
இந்தப் படத்தை சுசிகணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்தியில் இரண்டு படங்கள் தயாரித்துள்ள சுசிகணேசன் இந்தி தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராக அங்கம் வகிக்கிறார். இவருடைய கம்பெனியின் முதல் படைப்பாக ‘வஞ்சம் தீர்த்தாயாடா’ வெளிவரவுள்ளது.
இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ளளது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத புதுமையான முயற்சிகளோடு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.