பக்கத்து வீட்டுக்கு வந்த களவாணிப்பய நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரமாட்டான்ங்கிறது என்ன நிச்சயம்?
பொதுவா வெளிநாட்டுக்கு போயிட்டு வர்ற நம்ம ஆளுங்க கூடவே கொரானாவையும் கூட்டிட்டு வந்திடுறாங்க.
உலகநாயகன் ,வைகைப்புயல் கொரானாவுடன் வந்து சேரலியா ?அதென்ன அந்த நாட்டு ஏர்போர்ட் செக்கிங்கில் தெரியாத கொரானா சென்னைக்கு வந்ததும் தலையைக் காட்டுது.?
கிருஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு வெளிநாடு போன தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு திரும்பியதும் கொரானா .
மஞ்சு மனோஜ்க்கு கொரானா. மஞ்சு லட்சுமிக்கும் அதே!
பெங்களூர்ல மீனாவுக்கு கோவிட் !
மாஸ்க் போடுங்கய்யான்னு அரசாங்கம் கடுமையா கத்தினாலும் பய மக்கா காதுல பஞ்சை திணிச்சிக்கிட்டு சுத்துறாய்ங்க .கேக்க மாட்டேன்னு திரியிறவன நாலு இழுப்பு இழுத்தாதான் சரி வரும்.!
சாத்துபடி நடத்து சாரே!