உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.இந்த (2022) ஆண்டாவது கொரோனாவுக்கு முடிவு கட்டும் ஆண்டாக அமையாதா என ஏங்கியவர்களை 3வது அலை மீண்டும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டது.
இதன் காரணமாக பலகோடிகளில் உருவாகியுள்ள ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம், அஜித் குமாரின் வலிமை உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் பல பொங்கலுக்கு திரையிடபடவுள்ளது. இந்நிலையில், வரும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,இசையமைப்பாளரும்,நடிகருமான விஜய் ஆன்டனி தனது சமூக வலைதளத்தில், “கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும் எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும்.. வாழ்க வளமுடன்” என கொந்தளித்துள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.