கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 13 ஆயிரம் பேருக்குமேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய்,விஷ்ணு விஷால் நடிகைகளில் த்ரிஷா, மீனா, குஷ்பு உள்ளிட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த பழம்பெரும் திரைப்பட பாடகி, த நைட்டிங் கேர்ள் ஆஃப் பாலிவுட் என புகழப்படும் லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
92 வயதாகும் அவர், மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவரது மருமகள் ரச்சனா உறுதிப்படுத்தியுள்ளார்.